அதிமுகவிற்கு ஷாக்...பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய கட்சி!!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிமுக பாஜக என்ற மூன்று கட்சிகளின் தலைமையில் மும்முனை போட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
அடுத்த ஆண்டு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போதிலிருந்து பல மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தை கட்சி துவங்கி மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி குறித்து முடிவுகளும், சலசலப்புகளும் அங்கங்கே நடந்தேறி வருகின்றது. இதில் தமிழகத்தில் பாஜக கட்சி பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ளது.
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில், அக்கட்சி புது கூட்டணியோ அல்லது தனித்தோ நிற்கும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அதிமுகவிற்கு அதிர்ச்சி
இதில் மாநில அரசியலில் ஈடுபட்டு வரும் கட்சிகள் அதிமுகவின் கூட்டணிக்கு தான் பெரும்பாலும் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது தமிழகத்தில் மாநில கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக கூறி, அதிமுகவிற்கு கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஐஜேக கட்சியின் ஏசி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 23 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் புதிய நீதிக்கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது என கூறியவரிடம், கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாக தெரிவித்தாலும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம் என கூறினார்.
இதன் மூலம் அவர் மறைமுகமாக தங்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது என்றும், பாஜகவிற்கே தங்களது ஆதரவு என்பதையும் சூசகமாக கூறியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.