மகளிர் உரிமை என்கிறார் ஸ்டாலின்.. கனிமொழியை கட்சித் தலைவராக்குவாரா? - ஜெயக்குமார் காட்டம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக குறித்து பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கேட்டு பெறுவதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் என எந்த தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது,
மகளிர் உரிமைக்காக மாநாடு போடும் திமுக, அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழியை கட்சி தலைவராக்குமா? காவிரி விவகாரத்தில் திமுக அரசு தமிழகத்தின் உரிமையை கேட்டு பெறுவதில் தோல்வி அடைந்துள்ளது.
மகளிர் உரிமை
இதனை தொடர்ந்து, "பெண்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மத்தியில் கொண்டு வரப்படும்போடு முதல் கையெழுத்து போட்டது ஜெயலலிதா தான். திமுக இல்லை. உள்ளாட்சி பொறுப்புகளில் 50 சதவீத பெண்கள் வர வேண்டுமென கையெழுத்து போட்டவரும் ஜெயலலிதாதான். இன்று ஒரு லட்சம் பெண்கள் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதா தான்.
ஆனால் இன்று திமுகவினர் என்னை ஏமாற்றுகின்றனர். அதிமுக தலைமையில் நிச்சயமாக மெகா கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைப்பார். பாஜகவுடன் இப்போது அதிமுக கூட்டணி இல்லை. எப்போதும் இல்லை என்பதை ஈபிஎஸ் தெளிவுப்படுத்திவிட்டார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குவந்த பின்னர் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமை. ஆனால் இங்கு கொலை, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு ஆகியவை சர்வசாதாரணமாக நடந்துவருகிறது" என்று கூறியுள்ளார்.