சாம்ராஜ்யங்கள் சரியலாம் - படைத்தலைவன் மடிவதில்லை !! உருக்கமாக பதிவிட்ட ஜெயக்குமார்

MS Dhoni Chennai Super Kings ADMK D. Jayakumar
By Karthick May 19, 2024 09:58 AM GMT
Report

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோனி குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தோனி

உலக கிரிக்கெட்டில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்கும் தோனி, இந்த ஆண்டுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறவுள்ளார் என தொடர்ந்து கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

admk jayakumar -about csk and dhoni

நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. பெங்களுரு அணி Playoff வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

சென்னை தோல்விக்கு காரணமே தோனி தான் - கலாய்த்த தினேஷ் கார்த்திக்

சென்னை தோல்விக்கு காரணமே தோனி தான் - கலாய்த்த தினேஷ் கார்த்திக்

ஜெயக்குமார் உருக்கம்

தோனி அவுட்டாகி சோகமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

admk jayakumar -about csk and dhoni

அப்பதிவில், தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்!

ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை!

நன்றி‌ தோனி!❤️