நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் இழுக்கும் அதிமுக..?

Tamil nadu ADMK PMK DMDK
By Jiyath Jan 31, 2024 06:02 AM GMT
Report

பாமக, தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலுவான கூட்டணி 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வியூகங்கள் அமைத்து வருகிறது.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் இழுக்கும் அதிமுக..? | Admk In Talks With Pmk And Dmdk

இந்நிலையில் பாமக, தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

நான், தினகரன், சசிகலா இணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்!

நான், தினகரன், சசிகலா இணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்!

வெளியான தகவல் 

கூட்டணியை உறுதி செய்யும் பணியில் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் இழுக்கும் அதிமுக..? | Admk In Talks With Pmk And Dmdk

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாமக , தேமுதிக கேட்கும் தொகுதிகள் எவை? கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து அதிமுக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.