பாஜகவுடன் நீடிப்பது நல்லதல்ல, கூட்டணி வேண்டாம் - அதிமுக நிர்வாகிகள் கருத்து!
அதிமுக நிர்வாகிகள் பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசியுள்ளனர்.
கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தற்போதைய அரசியல் சூழல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து இதில் சமீப காலமாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல் குறித்து பேசினார். இதில் சமீபத்தில் ஜெயலலிதா ஊழல் வழக்கு குறித்து அண்ணாமலை பேசியது விவாதிக்கப்பட்டது.
நிர்வாகிகள் கருத்து
இதனை தொடர்ந்து, அண்ணாமலைக்கு எதிராக பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். அதில் இதற்குமேல் பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது நல்லதல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.
பின்னர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.