16-ஆம் தேதி திடீரென கூடும் அதிமுக செயற்குழு கூட்டம்!! தலைமை கழகம் அறிவிப்பு

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Karthick Aug 07, 2024 09:24 AM GMT
Report

செயற்குழு கூட்டம் 

வரும் 16-ஆம் தேதி அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Edapadi pazhanisamy thinking

ஆனால், அது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. எதனால் கூட்டம் தள்ளிவைக்கப்ட்டது என்பது தொடர்பாக தகவல் வெளிவராத நிலையில் தான், தற்போது அவசர செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

இதனை அதிகாரபூர்வமாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

கைகூடாத வெற்றி - பிரஷாந்த் கிஷோர் அணுகும் அதிமுக - தமிழக அரசியலில் அதிரடி நகர்வு?

கைகூடாத வெற்றி - பிரஷாந்த் கிஷோர் அணுகும் அதிமுக - தமிழக அரசியலில் அதிரடி நகர்வு?

கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

admk office

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.