கைகூடாத வெற்றி - பிரஷாந்த் கிஷோர் அணுகும் அதிமுக - தமிழக அரசியலில் அதிரடி நகர்வு?

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Prashant Kishor
By Karthick Jul 26, 2024 03:53 PM GMT
Report

அதிமுக

2019-ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து நடைபெற்று வரும் தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது அதிமுக. தோல்விகள்களால் கட்சியின் தொண்டர்களும் துவண்டு போயுள்ளார்கள்.

ADMK Edappadi Palanisamy

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வி குறித்தாக ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது. அதில், கட்சிக்கு சரியான கூட்டணி இல்லாததே காரணமாக பலர் கூறியதாக தகவல் உள்ளது.

சரியான கூட்டணி இல்லை..தோல்விக்கு காரணமே அது தான்!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்

சரியான கூட்டணி இல்லை..தோல்விக்கு காரணமே அது தான்!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்

இதனையே வலியறுத்திய பலரும், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.

பிரஷாந்த் கிஷோர் 

கூட்டணி குறித்து என்ன முடிவெடுக்கும் என அதிமுக தலைமை மீது பலரும் கவனத்தை திரும்பியிருக்கும் சூழலில், தற்போது வேறொரு செய்திகளும் வெளிவந்துள்ளது.

Prashanth Kishore

அதாவது வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசனைகளை வழங்க பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரை அதிமுக தலைமை நாடவுள்ளதாக பேசப்படுகிறது. தேர்தலுக்கு முன்னிட்டு வியூகங்களை வகுத்து கொடுக்க அவரை கட்சி அணுகப்போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், இச்செய்தி வைரலாகி இருக்கிறது.