அதிமுகவிற்கு துரோகம் செய்தால் ஓபிஎஸ் நிலைமை தான் - எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Jun 19, 2024 07:37 PM GMT
Report

அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவிற்கு துரோகம் செய்தால் ஓபிஎஸ் நிலைமை தான் - எச்சரித்த எடப்பாடி பழனிசாமி! | Admk Edappadi Pazhanisami About Ops

40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தேர்தலில் பின்வாங்கிய அதிமுக - பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன்!

தேர்தலில் பின்வாங்கிய அதிமுக - பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன்!

விசுவாசம் இல்லாதவர்

நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 40 எம்பிக்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ்.

அதிமுகவிற்கு துரோகம் செய்தால் ஓபிஎஸ் நிலைமை தான் - எச்சரித்த எடப்பாடி பழனிசாமி! | Admk Edappadi Pazhanisami About Ops

மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.