அதிமுகவில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு
அதிமுகவில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடங்கிய கூட்டம்
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் வெளியேறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஒரே தலமை கோஷம்
மேலும், எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாஜக, பாமக ஆகியவை தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக தலமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரி முழக்கம் எழுப்பினர்.
இதில் ஒரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டனர்.அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று வரக்கூடிய நிலையில் அதிமுக தலமை அலுவலகத்தில் ஒற்றை தலைமை முழக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நிலை தமிழகத்திலும் விரைவில் வர வாய்ப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்