அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கு - செங்கோட்டையன் பரபரப்பு தகவல்

Coimbatore ADMK Edappadi K. Palaniswami K. A. Sengottaiyan
By Sumathi Nov 03, 2025 06:57 AM GMT
Report

அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குடும்ப அரசியல்

கோவையில் விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.

edappadi palanisamy - sengottaiyan

அதிமுகவில் மகன், மைத்துனர். மாப்பிள்ளையின் தலையீடு இருக்கிறது. புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - அவர் என்ன சொன்னார் தெரியுமா?

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - அவர் என்ன சொன்னார் தெரியுமா?

செங்கோட்டையன் தகவல்

இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரச்சனைகளை பார்க்கும் போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய (எடப்பாடி பழனிசாமி) அரசியலிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களின் தலையீடு இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை.

அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கு - செங்கோட்டையன் பரபரப்பு தகவல் | Admk Did Family Politics Says Sengottaiyan

புரட்சி தலைவர் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் என் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.

தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றி கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்பது தான் தத்துவம்” என்று தெரிவித்துள்ளார்.