தமிழகத்தில் குடும்ப ஆட்சியை விரட்ட தமிழக வாக்காளர்கள் காத்திருக்கின்றனர் - சவால் விட்ட ஈபிஎஸ்!

MGR Tamil nadu DMK Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Jan 17, 2025 01:58 AM GMT
Report

எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி  பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எம்ஜிஆர் 

தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்தவர் எம்ஜிஆர். தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட, திரைத் துறையில் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றிவாகை சூடும் சாதனையாளராக, சரித்திர நாயகராக வாழ்ந்தவர்.

எடப்பாடி பழனிசாமி

எம்ஜிஆர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழ்ச் சமூகத்துக்கு என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றை செய்து முடிக்கத்தான், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றி வருகின்றது.

தேர்தல் நியாயமாக நடைபெறாது..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக!

தேர்தல் நியாயமாக நடைபெறாது..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக!

குடும்ப ஆட்சி

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட உறுதியேற்போம் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.