எங்கள் கட்சியில் எம்.பி வேட்பாளராக விருப்பமா..? அழைக்கும் அதிமுக - இருக்கும் கண்டிஷன்
வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டிலும் சூடுபிடித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. 10 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முற்பட்டு வருகின்றது.
அதே போல, மறுபுறத்தில் அதிருப்தியில் இருக்கும் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை அமைத்து பாஜக வீழ்த்தும் பணிகளை காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.
வேட்பாளராக...
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பப் படிவங்கள் அளிக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை,
உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 19, 2024
40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில்… pic.twitter.com/IjpluecFYy