நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதி - எத்தனை தொகுதிகள்?

Tamil nadu ADMK DMDK Election
By Jiyath Mar 18, 2024 06:01 AM GMT
Report

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதி - எத்தனை தொகுதிகள்? | Admk And Dmdk Alliance Is Confirmed

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த மாதம் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மக்களை பிளவுபடுத்தும் பாஜக வீட்டுக்கு அனுப்பப்படும் - மும்பையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

மக்களை பிளவுபடுத்தும் பாஜக வீட்டுக்கு அனுப்பப்படும் - மும்பையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

அதிமுக-தேமுதிக 

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதி - எத்தனை தொகுதிகள்? | Admk And Dmdk Alliance Is Confirmed

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் 20-ம் தேதி அதிமுக-தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.