பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரின் வீடு இடித்து சேதம்; அரசின் அதிரடி நடவடிக்கை!
பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர நபரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் வசித்து வரும் அயன் கான் என்ற இளைஞர் 23 வயதுடைய பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்த அயன் கான், பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அவரை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியதோடு கண்ணில் பசையை தடவி சித்திரவதை செய்துள்ளான். இது தெடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதிரடி நடவடிக்கை
அதன்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு அயன் கானை கைது செய்தனர், அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த 60 லிட்டர் சாராயத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, அயன் கான் வீடு சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்டறிந்த போலீசார் அவருக்கு இரண்டு நாள் முன்பு கேடு வைத்து நோட்டீஸ் வழங்கபட்டது. இதை தொடர்ந்து, அடுத்த நடவடிக்கையாக அதிகாரிகள் அவரது வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் குவாலியர் அனுப்பப்பட்டார்.