சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - புகைப்படங்களை வெளியிட்ட ISRO!
ஆதித்யா எல்-1விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சூட்' (SUIT) எனப்படும் தொழில்நுட்பக்க கருவி சூரியனின் புரா ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது.
ஆதித்யா எல்-1
சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO). இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி 1ஐ சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். மேலும், வரும் ஜனவரி 7ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
சூரியனின் புகைப்படங்கள்
இந்நிலையில் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சூட்' (SUIT) எனப்படும் தொழில்நுட்பக்க கருவி சூரியனின் புரா ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது. 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் குறித்தான, சிக்கலான வடிவம் குறித்தான தெளிவான புகைப்படத்தை ஆதித்யா எல்1 படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சூரியனை பற்றிய மேலும் பல புதிய தகவல்களை அறிய உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.