ஆதித்யா எல்-1; முதல் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் விண்கலம் !

ISRO Aditya-L1
By Swetha Apr 08, 2024 04:09 AM GMT
Report

 இன்று முதல்முறையாக ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியகிரகணத்தை அய்வு செய்ய உள்ளது.

ஆதித்யா எல்-1

கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

ஆதித்யா எல்-1; முதல் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் விண்கலம் ! | Aditya L 1 Spacecraft To Observe Solar Eclipse

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய செலுத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் 1-வது புள்ளி' என்ற இலக்கில் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - புகைப்படங்களை வெளியிட்ட ISRO!

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - புகைப்படங்களை வெளியிட்ட ISRO!

சூரிய கிரகணம்

அங்கிருந்து சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் காந்த புயல்கள் ஆகியவை குறித்து இது ஆய்வுபணிகளை செய்து வருகிறது.

ஆதித்யா எல்-1; முதல் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் விண்கலம் ! | Aditya L 1 Spacecraft To Observe Solar Eclipse

இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று தனது ஆய்வு பணிகளுக்கிடையே முதல் முறையாக சூரியகிரகணத்தை ஆய்வு செய்ய உள்ளது.இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் லெனின் பேசினார்.

அப்போது, 'வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று (திங்கட்கிழமை) இரவில் வருவதால் இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை' என்று கூறினார்.