அதிதி எனக்கு தங்கச்சிங்க...சங்கரிடம் மன்னிப்பு கேட்டு பல்டி அடித்த கூல் சுரேஷ்!

Only Kollywood Shankar Shanmugam Aditi Shankar Viruman
By Sumathi 3 மாதங்கள் முன்

அதிதியை காதலிப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது அவர் எனக்கு தங்கச்சி மாதிரி எனக் கூறி இயக்குனர் சங்கரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் கூல் சுரேஷ்.

 கூல் சுரேஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

அதிதி எனக்கு தங்கச்சிங்க...சங்கரிடம் மன்னிப்பு கேட்டு பல்டி அடித்த கூல் சுரேஷ்! | Aditi Sankar Is My Sister Cool Suresh Apologised

கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை டிஎஸ் தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் அதிதியை பார்த்து சில்லறையை சிதற விட்டேன் என்றும்,

 பகிரங்க மன்னிப்பு 

அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி என்றும் பேசிய வீடியோ வைரலானது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அதிதி ஷங்கரை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல

அதிதி எனக்கு தங்கச்சிங்க...சங்கரிடம் மன்னிப்பு கேட்டு பல்டி அடித்த கூல் சுரேஷ்! | Aditi Sankar Is My Sister Cool Suresh Apologised

என்னுடைய காதலையும் சேர்த்து வைக்க வேண்டும் ஷங்கர் சார் என எழுதிய லவ் லெட்டரையும் மீடியாவுக்கு முன்பாக கூல் சுரேஷ் காட்டியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், கூல் சுரேஷ் திடீரென அப்படி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதில், தனது பள்ளி தோழி தேன்மொழி ஞாபகம் அதிதி தேனாக நடித்ததை பார்த்து வந்து விட்டது என்றும் அப்படி பேசியது தவறு தான் என்னை மன்னித்து விட்டு விடுங்கள். நடிகை அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி. அவரது நடிப்பை பார்த்து வியந்து போய் அப்படி ஓவராக பேசி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.