இயக்குனர் சங்கர் மகளை காதலிக்கிறேன் - நகைச்சுவை நடிகர் பரபரப்பு பேட்டி

Aadhi Viruman
By Thahir 3 மாதங்கள் முன்

நகைசுவை நடிகர் கூல் சுரேஷ் பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கர் மகளை காதலிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கூல் சுரேஷ் பரபரப்பு பேட்டி 

புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்தால் திரையரங்கில் முதல் காட்சியை பார்த்த பின் கூல் சுரேஷ் அளித்து வரும் பேட்டி அண்மை காலமாக டிரெண்டிங் ஆகி வருகிறது.

Cool Suresh

இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

சென்னையில் நேற்று அதிகாலை முதல் அனைத்து திரையரங்குளிலும் திரைப்படம் வெளியானது. தனியார் திரையரங்கு ஒன்றில் படம் முடிந்து வெளியே வந்த நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,பிரமாண்ட இயக்குநரின் மகளைப் பார்க்கத் தான் வந்தேன். மாமனார் ஷங்கர் சார். நான் அதிதியைக் காதலிக்கிறேன்.நீங்க பெரிய இடம்.நான் ஏழை.

திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் செல்வேன் என்று நகைச்சுவையாக பேட்டி அளித்துள்ளார்.