நடிகர் பிரபுவின் மகளை கரம்பிடித்த 'விஷால்' பட இயக்குநர் - திரை பிரபலங்கள் வாழ்த்து!
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கினார்.
சமீபத்தில் ஆதிக் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரையப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும், கே-13, நேர்கொண்ட பார்வை, கோப்ரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணம்
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன், சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இருவருக்கும் இன்று சென்னையில் கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யா இருவரின் திருமண புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.