ஆதவ் அர்ஜூனா செயல்பாட்டுக்கும்.. குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை - மனைவி அறிக்கை
ஆதவ் அர்ஜுனா அரசியல் செயல்பாட்டுக்கும் எங்க குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா உள்ளார்.
இந்நிலையில் இவரது மனைவியும், பிரபல லாட்டரி நிறுவன அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகளுமான டெய்சி இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
அவரது அனைத்து தொழில் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகளும் நிலைப்பாடுகளும் அவரவரின் தனிப்பட்ட தீர்மானங்கள். அவை எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் கொண்டவை அல்ல. எங்கள் வாழ்க்கை குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு.
மனைவி அறிக்கை
நாங்கள் இருவரும் தனித்துவமான பணி வாழ்க்கையையும் தனித்துவமான கருத்துகளையும் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை மதிக்கிறோம். இதற்கு மாறாக எந்தவொரு தவறான கூற்றுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
எங்கள் இருவரின் நலனுக்காக, தொழில் மற்றும் பொது வாழ்க்கை விவகாரங்களை குடும்பத்துடன் தொடர்புபடுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.