ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி!
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதியை கனிமொழி எம்.பி வழங்கினார்.
கனிமொழி எம்.பி
தூத்துக்குடி துப்பாக்கி-சூட்டில் உயிரிழந்த 13-பேர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்கியது. தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கூடுதலாக 5-லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அதிகார பூர்வமாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், கனிமொழி எம்.பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நிதியை வழங்கினார்.
கூடுதல் நிதி
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடியில் வரும் 12ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ள நிலையில் அவர்களிடம் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் ஆணை அறிக்கையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. எனவே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஸ்டெர்லைட் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்பி அச்சப்பட தேவையில்லை.
சமூக வலைத்தளங்களில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வந்திகள் பரப்பும் நபர்களை நேரில் அழைத்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.