முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக் - செல்பி எடுக்க குவியும் மக்கள்

M K Stalin Government of Tamil Nadu Tiruchirappalli
By Thahir Dec 10, 2022 10:56 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக்கின் முன்பு பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

முதலமைச்சர் வடிவத்தில் கேக் 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் வகையில், 

திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேஸ்வரி பேக்கரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவத்தில் 6 அடி உயரமும், சுமார் 90 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

செல்பி எடுக்க குவியும் மக்கள் 

இந்த கேக்கை 90 கிலோ சர்க்கரை 80 முட்டை கலந்த கலவையால் 24 மணி நேரத்தில் பேக்கரி ஊழியர்கள் 4 பேர் குழுவாக சேர்ந்து தயாரித்துள்ளனர்.

a-92-kg-cake-made-in-the-shape-of-cm-mk-stalin

இந்த கேக் இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் உருவத்தில் உருவாக்கப்பட்ட கேக்குடன் செல்பி எடுத்து செல்கின்றனர்