அன்றாட வாழ்வில் சமஸ்கிருதத்தை இணைத்து கொள்ளுங்கள் - வேண்டுகோள் வைத்த பிரதமர் மோடி
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய நாட்டின் பிரதமர் மோடி, இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
மனதின் குரலில் மோடி
111 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமராக 3-வது முறை தேர்வான பிறகு நேற்று பேசினார் பிரதமர் மோடி. அவர் பேசியது வருமாறு,
ஜூன் மாதம் 30ஆம் தேதி தான் 50 ஆண்டுகளுக்கு முன் ஆகாஷ்வானியில் முதல் சமஸ்கிருத செய்தியறிக்கை ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளில் இந்தச் செய்தியறிக்கை பலரையும் சம்ஸ்கிருதத்துடன் இணைத்துள்ளது.
ஆல் இண்டியா ரேடியோவிற்கு பாராட்டுக்கள். சமஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நாம் சம்ஸ்கிருதத்திற்கு மதிப்பளித்து அன்றாட வாழ்விலும் அதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அனைவரும்...
பெங்களூரூவில் பலர் இதனை செய்து வருகிறார்கள். பெங்களூரூவின் கப்பன் பூங்காவில் புதிய பாரம்பரியத்தைத் துவங்கியிருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு முறை, ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சம்ஸ்கிருதத்தில் உரையாடி கொள்கிறார்கள். இதற்கு சமஸ்கிருத வார இறுதி என்று பெயர்.
சில நாட்களிலேயே இம்முயற்சி மக்களிடம் பிரபலமானதாகியுள்ளது.நாம் அனைவரும் இவ்வகையான முயற்சிகளில் இணைத்தால் உலகின் தொன்மையான, அறிவியல் செறிவுடைய மொழியின் உதவியுடன் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்றார்.