சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைப்பற்றும் அதானி? ரசிகர்களை அதிரவைத்த செய்தி!!

Chennai Super Kings Gautam Adani
By Karthick Jun 02, 2024 03:39 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரபல தொழிலதிபர் அதானி வாங்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதானி

நாட்டின் மிக பெரிய பணக்காரராக இருக்கும் அதானி, கால் பாதிக்காத துறையே இல்லை. அனைத்து துறைகளிலும் அக்கம்பேனி தனது வலுவான தடத்தை பதித்துள்ளது.

adani group of industries

அதானி துறைமுகத்தில் துவங்கி, அதானி ரயில் வரை வந்துவிட்ட அவர்கள், இன்னும் பெரிய அளவில் கவனம் செலுத்தாத ஒன்றாக உள்ளது கிரிக்கெட் துறை.

gautam adani

குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரையில் மிகவும் செழிப்பான ஒரு துறையாகவே உள்ளது கிரிக்கெட். சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டது போது, குஜராத் அணியை அதானி குழுமம் தான் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கைமாறும் சென்னை 

ஆனால், அது நிகழவில்லை. ஐபிஎல் தொடரில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நிர்வாகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தோனி ஓய்வு பெருகிறாரா?முட்டாளாக்கி ..கடுப்பான சென்னை பௌலிங் கோச்!!

தோனி ஓய்வு பெருகிறாரா?முட்டாளாக்கி ..கடுப்பான சென்னை பௌலிங் கோச்!!

யுபிஐ வர்த்தகத்தில் கால்பதிக்க முயலும் அதானி குழுமம், நஷ்டத்தில் இருக்கும் paytm நிறுவனத்தை வாங்க முன்வந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை paytm நிறுவனமே மறுத்துள்ளது.

adani to take over chennai super kings

அதன் அடிப்படையில் தான் ஆடவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை அதானி குழுமம் வாங்க பேச்சுவார்த்தை நடப்பதை செய்திகள் கிளம்பியுள்ளன. லாபத்தில் இருக்கும் சென்னை அணியை யாராவது விற்க முன்வருவார்களா..?