40 நாட்களுக்கு தொடரும் மாதவிடாய் - அரியவகை நோய் எனக்கு இருக்கு!! கேரளா ஸ்டோரி நடிகை
ஆதா சர்மா தமிழில் பிரபுதேவாவின் "சார்லி சாப்ளின் 2" படத்தில் நடித்திருந்தார்.
பாதிக்கப்படும் நடிகைகள்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளம் வரும் சமந்தா, கடந்த சில காலத்திற்கு முன்பு தான் மையோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து ரசிகர்களை அதிரவைத்தார்.
சினிமாவில் இருந்து சில காலம் விலகியவர், அந்நோய் பாதிப்பிற்காக அவர் ட்ரீட்மென்ட் பெற்று மீண்டும் படங்களில் நடிப்பதை துவங்கியுள்ளார். அதே போல தற்போது மற்றுமொரு பிரபல நடிகை தனக்கு அரியவகை நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களை அறிவித்துள்ளார்.
அவர் நடிகை ஆதா சர்மா.
48 நாட்களுக்கு....
பிரபுதேவா நடிப்பில் வெளியான "சார்லி சாப்ளின் 2" படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஆதா சர்மா .தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவர், அண்மையில் வெளியாகி பெரும் சலசலப்புகளை ஏற்படுத்திய கேரளா டைரி படத்திலும் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
இவர் தான் தனக்கு ஒரு அரியவகை நோய் இருப்பதாக கூறியுள்ளார். தனியார் பேட்டி ஒன்றில் அவர் அளித்துள்ள பேட்டியில், “கேரளா ஸ்டோரி படத்தின் ஷூட்டிங் போது, இடுப்புப் பகுதி மற்றும் முதுகுப் பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டன
நான் மிகவும் அழுத்தமாக இருந்தேன், எனக்கு எண்டோமெட்ரியோசிஸ்(endometriosis) என்ற நிலை ஏற்பட்டது, அதாவது மாதவிடாய் இடைவிடாது, என்னுடையது 48 நாட்கள் நீடித்தது என தெரிவித்துள்ளார்.