Friday, May 2, 2025

அய்யோ… நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவிற்கு அடுத்து வந்த இன்னொரு பிரச்சினை - ரசிகர்கள் ஷாக்...!

Samantha
By Nandhini 2 years ago
Report

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவிற்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் சமந்தா ரூத் பிரபு ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

எலும்பு தோலுமாக மாறிய சமந்தா

சமீபத்தில், ‘யசோதா’ படத்திற்காக விளம்பரம் செய்ய சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள், பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு... சமந்தா... நீங்க... எலும்பும் தோலுமாக மாறிட்டீங்க... உங்க உடம்பை நல்லபடியாக பார்த்துக்கோங்க.. ரொம்ப வேலையில் இறங்காதீங்க... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

samantha-myositis

சமந்தாவிற்கு வரும் அடுத்தடுத்து பிரச்சினை

சமந்தாவிற்கு ஏற்பட்டுள்ள Myositis என்ற தசை அழற்சி நோயால் சமந்தா எழுந்து ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுதாம். இதனால், நடிகை சமந்தாவின் பட வாய்ப்புகள் பறிபோவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ‘புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதனையடுத்து, ‘புஷ்பா’ 2ம் பாகத்திலும் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமந்தா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பாடலுக்கு நடனமாட நடிகை காஜல் அகர்வாலை படக்குழு அணுகியுள்ளனராம்.