தாய் கடும் எதிர்ப்பு; மீறி திருமணம்; பிரசவத்தில் விட்டுச்சென்ற கணவன் - மனோரமாவின் மறுப்பக்கம்
மறைந்த நடிகை மனோரமா திருமணம் வாழ்க்கை குறித்த தகவல் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை மனோரமா
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் மட்டுமல்ல, அனைத்து விதமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனோரமா. இவர் 3 தலைமுறைகளாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.
1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்து வந்தார். அவரது காதலுக்கு தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம்
சில நாட்களில் மனோரமா கர்ப்பமாக, மனமிறங்கிய தாய் அவரை ஏற்றுக்கொண்டார். ஆனால், கர்ப்பமான 9 மாதம் வரை அவரை நடிக்க கணவர் வலியுறுத்தினார். அதன்பின், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
1 மாதம் கழித்து குழந்தையை பார்க்க வந்த கணவர், உடனே நாடகத்தில் நடிக்க வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு மனோரமா மறுப்பு தெரிவிக்கவே,
அப்போது சென்ற கணவன் அதன்பின் வரவே இல்லை. உடனே, கணவர் வேண்டாம் என்று முடிவு செய்த மனோரமா, தனிமையில் வாழ்ந்து வெற்றி பெற்றுக் காட்டினார்.