ஆசையாய் சினிமாவில் நடிக்க வந்த மனோரமா - அவமானப்படுத்தி அழ வைத்த பிரபல நடிகர்... - வெளியான தகவல்...!

Manorama Tamil Cinema Indian Actress
By Nandhini Jan 23, 2023 12:48 AM GMT
Report

நடிகை மனோரமா

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் மட்டுமல்ல, அனைத்து விதமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனோரமா. இவர் 3 தலைமுறைகளாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

அவமானப்படுத்தி அழ வைத்த பிரபல நடிகர்

இந்நிலையில், நடிகை மனோரமா ஆரம்ப காலத்தில் அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டதை தயாரிப்பாளர் வீரய்யா ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசினார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,

ஒரு நாள் மேடை நாடகத்தை பார்க்க கண்ணதாசன் சென்றுள்ளார். அப்போது, மேடையில் மனோரமா நடித்து அசத்தியதைப் பார்த்த கண்ணதாசன், என்னுடன் வா... நான் உன்னை சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று கூறி சினிமாவில் நடிக்க வைத்தவர் கண்ணதாசன்.

தமிழ் சினிமாவில் முதல்முதலாக கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் தான் மனோரமா அறிமுகமானார். அப்படத்தில் மனோரம்மாவிற்கு ஜோடியாக ‘காத்தாடி’ ராதாகிருஷ்ணன் நடித்தார். ஆரம்ப காலத்தில் மனோரம்மா நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அதேபோல் சினிமாவிலும் மனோரமா கதாநாயகியாகவே நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், ஆனால் கண்ணதாசன் ஹீரோயின் அடையும் பெருமையை விட காமெடி நடிகையாக பெரும் புகழ் பெற்று விளங்குவாய் என்று கூறியுள்ளார்.

அதன் படியே அவர் காட்சிகள் படமாக்கப்பட்ட போது 2, 3 டேக்குகள் வாங்கியுள்ளார். இதனால் கடுப்பாகி போன கேமிரா மேனும், காத்தாடி ராதாகிருஷ்ணனும் மனோரமாவை இந்த படத்திலிருந்து நீக்கிவிடலாம். அதுதான் சரி... இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று கண்ணதாசனின் நண்பரான வீரய்யாவிடம் கூறியுள்ளனர்.

manorama-actress-tamil-cinema

இதை கேள்விப்பட்ட கண்ணதாசன் அது எப்படி அவர்கள் சொல்லலாம். மனோரம்மாவிற்கு தெரியவில்லை என்றால் சொல்லிக் கொடுப்பதுதான் நம் கடமை, அதை விட்டுவிட்டு, அவரை வெளியே அனுப்புவது எப்படி சரியாகும்.

இப்படி மனோரமாவை மறுபடியும் நடிக்க வைத்துள்ளார் கண்ணதாசன். கேமரா மேனும், மற்றவர்கள் தன்னை இப்படி சொல்லியதால் மனம் உடைந்த மனோரமா தன் தாயிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார்.

மனோரம்மா அழுவதைப் பார்த்த அவரது தாயும் கண்கலங்கியுள்ளார். ஆனால், கண்ணதாசன் தான் மனோரமாவின் திறமையை வெளிக்கொண்டு வந்தார் என்று வீரய்யா தெரிவித்தார்.