இது திட்டமிட்ட சதிதான்.. நடிகர்கள் மீது நடிகை தந்த பாலியல் புகார் - வாபஸ் பெற்றதால் பரபரப்பு!

Sexual harassment Kerala India Actress
By Swetha Nov 23, 2024 01:00 PM GMT
Report

மலையாள நடிகர்கள் மீது அளித்த பாலியல் புகாரை நடிகை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார்

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான பாலியல் தொல்லை விவகாரம் வெளியான வன்னமே உள்ளது. பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

இது திட்டமிட்ட சதிதான்.. நடிகர்கள் மீது நடிகை தந்த பாலியல் புகார் - வாபஸ் பெற்றதால் பரபரப்பு! | Actress Withdraw Sexual Assault Case Kerala Actors

பல நடிகைகள், மலையாள நடிகர்கள் மீது துணிச்சலுடன் பாலியல் புகார் அளித்தனர். அதில் முக்கிமானவர் கவர்ச்சி நடிகை மினு முனீர். இவர் முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு மற்றும் முகேஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில், போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், மலையாள நடிகர்கள் மீது தான் அளித்த அனைத்து பாலியல் புகார்களையும் வாபஸ் பெறப்போவதாக நடிகை மினு முனீர் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பவர் குரூப்; நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் - நடிகை பத்மபிரியா தாக்கு!

சினிமாவில் பவர் குரூப்; நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் - நடிகை பத்மபிரியா தாக்கு!

நடிகை

இது தொடர்பாக பேசிய அவர், நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் நான் அளித்த பாலியல் புகார்களை வாபஸ் பெறுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட சதிதான்.. நடிகர்கள் மீது நடிகை தந்த பாலியல் புகார் - வாபஸ் பெற்றதால் பரபரப்பு! | Actress Withdraw Sexual Assault Case Kerala Actors

எனினும், இந்த புகார் வாபஸை போலீசார் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வாரும்போது, அங்கு முறைப்படி எழுத்துபூர்வமாகத்தான் புகாரை வாபஸ் பெற முடியும்.

வாபஸ் வாங்குவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகை மினு முனீர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னுடைய உறவினரின் 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது குறித்து கூறிய அவர், இது... தான் புகார் அளித்த நடிகர்களின் திட்டமிட்ட சதி என்றும் இனி அவர்களை எதிர்த்து போராட முடியாது என்பதாலேயே வாபஸ் முடிவை எடுத்திருப்பதாக மினு முனீர் தெரிவித்துள்ளார்.