நிமிஷத்திற்கு ஒரு கோடி? தமிழில் முன்னணி நாயகிகளை முந்திய ஒரே பட நடிகை!
சம்பளம்
சினிமாவில் ஓரளவிற்கு வெற்றி பெற்று விட்டாலும், ஒருவரின் சம்பளம் என்பது பல கோடிகளை அடைந்து விடுகிறது. அதற்கு பல உதாரணங்கள் நம் முன்னே உள்ளது. நடிகர் - நடிகைகள் போட்டி போட்டி கொண்டு நடித்து வரும் சூழலில் தான் அதிகமாக யார் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற போட்டி சாதாரணமாகவே நீடித்து வருகிறது.

இதில் பலரும் பாலிவுட் பக்கமும் சென்று முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு காரணமும் உண்டு, அங்கு உள்ளவர்களின் சம்பளம் என்பது பெரிய அளவில் இருக்கிறது. அப்படி தான் பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்ததற்கு ஒரு நிமிடத்திற்கு சுமார் 1 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
நிமிடத்திற்கு 1 கோடி
அவர் யார் என்று தெரியுமா? தெலுங்கு படமாக வெளிவந்த ஸ்கந்தா படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுதெல்லா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட் படத்தில் நடித்திருந்தார்.
அப்பத்திற்கே இவர், 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகவெல்லாம் கூறப்பட்டது. இது உண்மையா என்பது தெரியாத நிலையிலும், இது பற்றி படத்தின் வெளியீட்டின் போது பரவலாகவே பேசப்பட்டது. ஸ்கந்தா படத்தில் இவரின் நடித்த பாடல் என்பது வெறும் 3 நிமிடம் மட்டுமே ஓட கூடியதாக இருந்தது.

அந்த ஒரு பாடலுக்கு இவர் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம்.
அப்படி பார்த்தால், ஒரு படத்தில் நடிப்பதற்கு 1 நிமிடத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக நாட்டிலேயே பெரிய இடத்தில் இருக்கிறார் ஊர்வசி ரவுதெல்லா.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil