பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு தாவிய நடிகை - அதிரடி முடிவு!
பிரபல நடிகை பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
நடிகை
தென்னிந்தியாவின் நடிகையான விஜயசாந்தி, 1998-ல் பாஜகவில் இணைந்து மகளிர் அணி செயலாளராக இருந்தார். இவர் 1999ல் லோக்சபா தேர்தலில் விஜயசாந்தி போட்டியிட்டார், பின்னர் இவர் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அதிமுகவுக்கும் பிரசாரம் செய்தார்.
அதனப்பிறகு தெலுங்கானா முழக்கத்தை முன்வைத்து தனிக்கட்சி தொடங்கினார். பிறகு அப்போதைய டிஆர் எஸ் இப்போதைய பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். 2014-ல் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸில் இணைப்பு
இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் விஜயசாந்திக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் தரவில்லை என்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
ఎంతో ఆదరణతో, సమున్నతమైన గౌరవంతో స్వాగతించిన, కాంగ్రెస్ అధిష్టానానికి రాష్ట్ర నాయకత్వానికి హృదయపూర్వక కృతజ్ఞతలు..
— VIJAYASHANTHI (@vijayashanthi_m) November 17, 2023
హరహర మహాదేవ్
జై తెలంగాణ
జైహింద్ pic.twitter.com/Xxqsm9O10e
தற்பொழுது நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்துக்கு வரும் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.