சீமான் மாமா..நான் உங்க கள்ளக்காதலி இல்ல - விஜயலட்சுமி வழக்கில் களமிறங்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Vijayalakshmi Seeman Madras High Court
By Sumathi Mar 05, 2024 10:27 AM GMT
Report

சீமான் மீது விஜயலட்சுமி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

விஜயலட்சுமி புகார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரா சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 முதல் நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டி வருகிறார்.

vijayalakshmi-seeman

மேலும், சீமான் அவரோடு நெருக்கமாக இருந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீமான் மீது மீண்டும் புகார் அளித்த நிலையில் வழக்கை வாபஸ் பெற்றார்.

தொடர்ந்து, சமீபத்திய வீடியோ ஒன்றில் இந்த கோர்ட், கேஸு, சண்டை, சச்சரவெல்லாம் தேவையில்லை. நான் ஒன்றும் உங்களின் கள்ளக்காதலி கிடையாது நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. தமிழ்நாடு மீடியா என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்க..

ஓவரா டார்ச்சர் பண்ணாதீங்க; தற்கொலை செஞ்சுப்பேன் - நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ!

ஓவரா டார்ச்சர் பண்ணாதீங்க; தற்கொலை செஞ்சுப்பேன் - நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ!

வழக்கு விசாரணை

எனக்கு என் கணவர் வேண்டும் என உருக்கமாக பேசியிருந்தார். இதற்கிடையில், விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சீமான் மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற முறையீட்டின் அடிப்படையில் இந்த மனு ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

சீமான் மாமா..நான் உங்க கள்ளக்காதலி இல்ல - விஜயலட்சுமி வழக்கில் களமிறங்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! | Actress Vijayalakshmi Seeman Case Judge Anand

முன்னதாக சீமான் வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்.29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, தற்போது நேரில் ஆஜராகுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.