என்னை அச்சுறுத்தி மிரட்டினார்கள்.. துடிதுடிக்க வச்சாங்க - சீமானை சாடிய நடிகை!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை புகாரளித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி
தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் சில காலம் சினிமாவில் காணாமல் போனார். தற்பொழுது அவர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்தார்.
முதலில் சீமான் தன்னை காதலித்தார், பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக்கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார், பிறகு தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார், என்று புகாரளித்துள்ளனர்.
சீமான் மீது புகார்
இந்நிலையில், அந்த நடிகை சீமான் குறித்து சில விடீயோக்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட 3 வீடியோக்கள் மக்கள் இடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. மேலும், இவர் தமிழக முதல்வரிடம் பல கோரிக்கைகளை வைத்து வீடியோ பதிவிட்ட வந்தார். ஆனால் இவர் தமிழ்நாட்டிற்கு வரவில்லை, அங்கு சீமான் ஆட்களால் பாதிப்பு ஏற்பட கூடும் என்று பாதுகாப்பு கருதி வரவில்லை. அனால் நேற்று அவர் சீமான் மீது புகார் அளிக்கப்போவதாக ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், "சீமானை காப்பாற்றுவதற்காக என்னை துடிக்க துடிக்க வைத்தனர். எவ்வளவு புகார்களை, மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று மீண்டும் புகார் கொடுக்க உள்ளேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. எனக்கு ஆதரவாக இந்த ஆளும் அரசு. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன்.
மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று காலை 11 மணிக்கு நான் போலீஸ் அலுவலகம் சென்று புகார் கொடுக்க போகிறேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.