50 வருஷமா சாப்பாடே சாப்பிடாமல் இருக்கேன் - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!
விஜயகுமாரி சுமார் 50 வருடங்களாக சாப்பிடாமல் வாழ்ந்து வருவதாக கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை விஜயகுமாரி
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை விஜயகுமாரி. முத்துராமன், ஏவிஎம் ராஜன், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், நாகேஷ், எம்.என். நம்பியார், எம்ஜிஆர், ரவிச்சந்திரன், டிஎம் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தொடர்ந்து எஸ் எஸ் ராஜேந்திரனை திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அதன் பிறகு கணவரை பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடைசியாக 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு என்ற படத்தில் நடித்திருந்தார்.
தங்கமகன், நான் மகான் அல்ல, வசந்த ராகம், மாவீரன், பெரிய இடத்து பிள்ளை, அரண்மனை கிளி, பெரிய மருது, தர்ம சக்கரம், தெனாலி ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 50 வருங்களாக நான் சாப்பாடு சாப்பிடுவதே இல்லை.
உணவு சீக்ரெட்
நாள்தோறும் காலையில் 2 வேக வைத்த முட்டைகளை தான் சாப்பிடுவேன். தனியா, ஜவ்வரிசி, மிளகு, சீரகம் ஆகியவற்றை கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் தோறும் அதை தான் குடிப்பேன். மதிய உணவாக ஒரு இட்லி, காய்கறி, மீன் குழம்பு என்று எடுத்துக் கொள்வேன்.
மதிய உணவிற்கு பிறகு ஆப்பிள் மற்றும் மாதுளை என்று பழங்கள் எடுத்துக் கொள்வேன். மாலையில் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவேன். இரவு நேரத்திற்கு ஒரு இட்லி சாப்பிடுவேன், இல்லையென்றால் தோசை சாப்பிடுவேன். 50 வருடங்களாக இதைத்தான் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.