பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லை - கலங்கிய குக் வித் கோமாளி பிரபலம்
நடிகை விசித்ரா தனது வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை விசித்ரா
அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோரின் காலக்கட்டத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா. சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தலைவாசல் படத்தில், மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழடைந்தார்.
தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், "என்னுடைய தந்தையை முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். அந்த காலத்தில் முகமூடி கொள்ளைகள் அதிகம் நடந்துவந்த சமயத்தில், தான் என் தந்தை கொலை செய்யப்பட்டார்.
யாருமே இல்லை
ஒருவேளை முகத்தை பார்த்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் அந்த கொள்ளையர்கள் என் தந்தையை கொன்றிருக்கலாம். அதேபோல் எனக்கு பக்கபலமாக இருந்து வந்த எனது தாயும் சமீபத்தில் இறந்துவிட்டார். தாய், தந்தை இருவருமே இறந்த பின்னர் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் இருக்கிறேன்.
என் தந்தை இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் பைக்கில் சென்று கீழே விழுந்துவிட்டார். அப்போது அவரது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதையடுத்த சில தினங்களில் அவர் இறந்துவிட்டதால், அந்த காயம் பற்றி என் அம்மா தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். என் தந்தையின் விரலில் காயம் பட்டதற்கு அவ்வளவு கஷ்டப்பட்ட என் அம்மா,
அவர் கொலை செய்யப்பட்டபோது எவ்வளவு வலியை அனுபவித்து இருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. இன்றளவும் அது எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியாகவே இருக்கிறது. இத்தகையை மனநிலையுடன் தான் தன்னுடைய வாழ்க்கை சென்று கொண்டு இருப்பதாக” தெரிவித்துள்ளார்.