ஆபாச வலைத்தளத்தில் புகைப்படம் - அதிர்ச்சியடைந்த பிரபல நடிகை

actressvichithra விசித்ரா
By Petchi Avudaiappan Apr 13, 2022 12:09 AM GMT
Report

நடிகை விசித்ரா தனது வாழ்க்கை பயணம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கவர்ச்சி கன்னியாக அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோரின் காலக்கட்டத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா. சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தலைவாசல் படத்தில், மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழடைந்தார். 

இதனிடையே விசித்ரா பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தன்னுடைய உண்மையான பெயர் ஜெயா என்றும்,  சினிமாவுக்காக விசித்ரா என்று மாற்றி வைக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் நான் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டேன். காதலிக்கும் போது எதுவும் கண்ணுக்கு எதுவும் தெரியாது, ஆனால் திருமணமான பிறகு அவருடைய உறவினர்கள் நடிகை என்பதால் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர்.

இதனால், திருமணமான 3 நாட்களில் எங்களின் உறவில் பிரச்சனை வந்தது. அதன் பிறகுதான் சினிமாவை விட்டு விலகி கணவர், குழந்தைகள் என வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார். 18 வருடமாக சினிமாவில் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில்,ஒரு இணையதள பக்கத்தில் என்னுடைய ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே உடைந்து போய்விட்டேன். அது என்னை மிகவும் காயப்படுத்தியது என்று விசித்ரா வருத்தத்துடன்  கூறியுள்ளார். அவருடைய வாழ்க்கைப் பயணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது.