தம், தண்ணி அடிப்பது.. தேவைப்பட்டது செய்தேன், அது வேற இது வேற - வெளிப்படையாக பேசிய வனிதா!

Tamil Cinema Vanitha Vijaykumar Tamil Actress
By Vinothini Aug 14, 2023 04:30 PM GMT
Report

நடிகை வனிதா பேட்டி ஒன்றில் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபலங்களான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள், வனிதா. இவர் 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

actress-vanitha-spoke-about-smoking

பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

பேட்டியில் அதிரடி பதில்

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வரும் படத்தின் பிரமோஷனுக்காக புகைப்பாம் ஒன்றை வெளிடியிட்டார் அது சர்ச்சையானது. அது குறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்திருப்பார், அதில் அவர் "நான் ஒரு நடிகை என்பதால், கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்தேன். அது நடிப்பு. இதை பார்த்துவிட்டு நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

actress-vanitha-spoke-about-smoking

காலம் மாறுகிறது, பெண்கள் தம் அடிப்பது, தண்ணியடிப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட விஷயத்தை மற்றவர்கள் சர்ச்சையாக்க தேவையில்லை. நிஜ வாழ்க்கையில் அனைவரும் குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வார்கள்.

ஆனால், சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதனால், சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்காதீர்கள். நடிகர்கள் படங்களில் புகை பிடிப்பதை வரவேற்கிறீர்கள். ஆனால், அதே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறார்கள்" என்று கூறியுள்ளார்.