வனிதாவின் மகன் குறித்த கேள்வி - சட்டென ஜோவிகா சொன்ன பதில் இதுதான்!
அண்ணன் குறித்த கேள்விக்கு ஜோவிகா அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.
வனிதா விஜயகுமார்
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
ஜோவிகா பதில்
அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார்.

அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வனிதா பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, நீங்க உங்களோட அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா?
அல்லது உங்களோட மகனை தேர்ந்தெடுப்பீங்களா? என்ற கேள்விக்கு, யார் என்னை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆண்களின் பின்னால் ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போய் விட்டேன். இனி ஒருபோதும் அந்த தப்பை செய்ய மாட்டேன் என வனிதா தெரிவித்துள்ளார்.
அதன்பின், ஜோவிகாவிடம் உங்களின் அண்ணனான ஸ்ரீஹரியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என்ற கேள்விக்கு, நீங்கள் யாரையாவது உண்மையாக நேசித்தால் அவர்களை அப்படியே ஃப்ரீயா விட்டு விடுங்கள்.
அது உங்களுடையது இல்லை என்றால் அது உங்களுடையது இல்லை என்று ஜோவிகா பதில் அளித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil