ஜோவிகா..பாய் பிரண்ட் வச்சுக்கோ; அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்னு சொன்னேன் - வனிதா பளீச்!
நடிகை வனிதா தனது மகள் ஜோவிகா குறித்து பேசியுள்ளார்.
வனிதா விஜயகுமார்
பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் சீசன் 7னில் இடம்பெற்றுள்ளார். அதில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் பேசியது பெரும் விவாதப்பொருளானது.
மேலும், தனது படிப்பு சம்பந்தமான எந்த விஷயத்தையும் மற்ற கண்டெஸ்டெண்ட்ஸ் யாரும் பேசவேண்டாம் என்று அவர் உத்தரவிட்டார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் சண்டை வெடித்தது. ஆனால் ஜோவிகா தனது விளையாட்டால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பேட்டி
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவுடன் இணைந்து முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியதாவது "நான் ஜோவிகாவிடம் சொன்னேன் "ஜோவிகா நீ ஒரு பாய் பிரண்ட் வச்சுக்கிட்டா எவ்வளவு யூஸ்புல்லா இருக்கும்.
ஒரு பாய் பிரண்ட் இருந்தா அழகா பிக்கப் பண்ணுவான், ட்ரோப் பண்ணுவான். உனக்கு துணியெல்லாம் மடிச்சு குடிப்பான்" என்று நான் ஜோவிகாவிடம் சொன்னேன். அதற்கு ஜோவிகா "எனக்கு பாய் பிரண்டே வேண்டாம்" என்று என்னிடம் கோவமாக சொன்னால். ஆனால் ஜோவிகா கண்டிப்பா ஒருநாள் காதலில் விழுவாள், வேற லெவலில் விழுவாள். அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்" என்று வனிதா பேசியுள்ளார்.