தாயை தொடர்ந்து பிக் பாஸில் களமிறங்கும் வனிதாவின் மகள்? - நடிகையின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!
வனிதாவின் மகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் பிரபலங்களான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள், வனிதா. இவர் 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.
பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
பிக் பாஸில் ஜோவிகா
இந்நிலையில், நடிகை வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா அவரது அம்மாவுடன் சேர்ந்து யூடியூப் சேனலில் வந்தார், தற்பொழுது இவர் தனது அம்மாவை பீட் செய்யும் அளவிற்கு வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய 18வது பிறந்தநாளை கொண்டாடினார், அதன்பிறகு அதிகமான போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும், நடிகை வனிதா தன்னுடைய மகள் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கு சொந்தமான நடிப்பு பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியும் பெற்றுள்ளதாக கூறி இருக்கிறார். பின்னர், தனது மகளுக்கு பட வாய்ப்புகள் வருவதாகவும் நல்ல கதை அமைந்தால், விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் நிற்பது போன்ற புகைப்படத்தை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாரா? என்று கேட்டு வருகின்றனர்.