ராஜ்கிரண் தப்பா பேசுனாரு.. ஸ்பாட்ல மடக்கித் தூக்கி அடிச்சேன் - போட்டுடைத்த வடிவுக்கரசி!

Rajkiran Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 10, 2024 04:00 PM GMT
Report

நடிகர் ராஜ்கிரண் குறித்து நடிகை வடிவுக்கரசி பேசியுள்ளார். 

நடிகை வடிவுக்கரசி

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பொக்கிஷங்களில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. கதாநாயகியாக அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் நடித்து பலரையும் மிரள வைத்தவர்.

ராஜ்கிரண் தப்பா பேசுனாரு.. ஸ்பாட்ல மடக்கித் தூக்கி அடிச்சேன் - போட்டுடைத்த வடிவுக்கரசி! | Actress Vadivukkarasi About Actor Rajkiran

அன்று முதல் இன்று வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவுக்கரசி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "நான் 'கன்னி பருவத்திலே' படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பிரவீனாவுக்கும் - பாக்கியராஜுக்கும் காதல் விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

இதை சிலர் வடிவுக்கரசியும் - பாக்கியராஜும் காதலிக்கிறார்கள் என ராஜ்கிரணுக்கு கால் பண்ணி சொல்லியுள்ளனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அவர் என்னை பார்த்ததும், பாக்கியராஜிடம் கத்த தொடங்கினார். அவரிடம் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசினார்.

என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!

என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!

கோபம் வந்துவிட்டது

ஏதோ பிரச்சனை நடக்கிறது என்று நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் "இங்க அவ அவ ஏன் காசுல ஹனிமூன் கொண்டாடுறாங்க" என ராஜ்கிரண் சொன்னார். எனக்கு செமையா கோபம் வந்துவிட்டது.

ராஜ்கிரண் தப்பா பேசுனாரு.. ஸ்பாட்ல மடக்கித் தூக்கி அடிச்சேன் - போட்டுடைத்த வடிவுக்கரசி! | Actress Vadivukkarasi About Actor Rajkiran

ஏன்னா அங்க நான் மட்டும்தான் பொண்ணு. மீதம் எல்லோரும் ஆண்கள் தான். இவர் "அவ அவ" என்று சொன்னது என்னைத் தான் என்பது எனக்கு தெரிந்ததும், டக்கென்று அந்த சேரில் இருந்து எழுந்து அந்த சேரை மடக்கித் தூக்கி அடித்து விட்டேன். உடனே ராஜேஷ், பாக்யராஜ் எல்லோரும் ஓடிவந்து என்னை சமாதானப்படுத்த பார்த்தார்கள்.

நான் யாரும் என் பக்கத்தில் வராதீங்க.. செய்யாத தப்புக்கு நான் பலி ஏற்கணுமா என கத்திட்டேன். ராஜ்கிரனிடம் என்னைப் பற்றி தவறாக சொன்னது அவருடைய முதல் மனைவிதான். பின்னர் ராஜ்கிரண் அங்கிருந்த காரை எடுத்துக்கொண்டு கிளம்பி போய்விட்டார்" என்று தெரிவித்துள்ளார்.