சிம்புவிற்கு ஜோடியாகனும்; அதுதான் என் வாழ்நாள் லட்சியமே - உருகிய நடிகை தேவயானி!
நடிகர் சிம்பு குறித்து நடிகை தேவயானி ஷர்மா மனம் திறந்துள்ளார்.
தேவயானி ஷர்மா
2021ல் வெளியான ரொமான்டிக் படத்தின் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவயானி ஷர்மா. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமான இவர், மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.
தொடர்ந்து, சைத்தான், சேவிங் தி டைகர்ஸ் ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது, விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாழ்நாள் லட்சியம்
அதில், ஹிந்தி மற்றும் தெலுங்கில் படங்கள் செய்தாலும், தமிழில் படம் செய்யவேண்டும் என்பதுதான் ஆசை. சாதாரண நாயகியாக மட்டுமில்லாமல் தனது நடிப்பு திறனை முழுவதுமாக செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வரவேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவிதான் எனக்கு முன்னுதாரணம்.
தனது வாழ்க்கையில் லட்சியம் என்பது சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான். இதற்காக முழு வீச்சில் இறங்கி அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளேன். மக்கள் எனது படங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் எனது லட்சியம் எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சிம்பு தற்போது அவரது 48வது படத்தின் வேளையில் படு பிஸியாக இருக்கிறார்.
You May Like This Video