ஒரு ராத்திரியில் ரோட்டுக்கு வந்துட்டோம்; இதுதான் என் எண்ணம் - வடிவுக்கரசி வேதனை
நடிகை வடிவுக்கரசி தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
வடிவுக்கரசி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர் நடிகை வடிவுக்கரசி. 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், படித்து முடித்ததும் ஒரு ஸ்கூலில் எல்கேஜி யுகேஜி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக என்னுடைய பயணம் தொடங்கியது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல என்னுடைய சம்பளம் குடும்ப தேவைகளுக்கு பத்தவில்லை.
அனுபவம்
அதன் பிறகு நான் ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அதுமட்டுமில்லாமல் ஒரு மேனேஜ்மென்டில் வேலைக்கு கீப்பிங் வேலையும் செய்தேன். அப்பா திரை துறையில் இருந்தார். சித்தப்பாவும் திரை துறையில் இருந்தார்.
திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தான் எங்களுடைய வாழ்க்கை ஒரேடியாக மாறிவிட்டது. ஒரே எங்களுடைய நடுத்தெருவுக்கு ஒரேடியாக விட்டோம். அப்போது தான் பேப்பரில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தை பார்த்து தான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இருந்தாலும், அளவு வாய்ப்புகளுக்கு காத்துக் கொண்டிருந்தேன். அது மட்டுமில்லாமல் எனக்கு காதல் சீன் வராது, டான்ஸ் ஆட வராது. இதனால் நான் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்தேன். அக்கா என்னுடைய கதாபாத்திரங்களில் வாழ்க்கையும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. என்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம்.
என்னுடைய ஒரே மகளை என்னுடைய அம்மா தான் வளர்த்து வந்தார். அவரிடம் என்னுடைய குழந்தையை கொடுத்துவிட்டு நான் அடிக்க வந்தேன்.
எப்போதுமே யாரிடம் சென்று நிற்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். நம்மால் முடிந்தவரை நான்கு பேருக்கு உதவி செய்துவிட்டு போக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.