நடிகை கார் மோதி மெட்ரோ ஊழியர் பலி - நடிகை உயிர் தப்பியது எப்படி?
நடிகை ஊர்மிளா கோத்தாரே கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊர்மிளா கோத்தாரே
பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து மராத்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஊர்மிளா கோத்தாரே.
இந்நிலையில் ஊர்மிளா கோத்தாரே இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, அவரது ஓட்டுநர் கார் கட்டுப்பாட்டை இழந்து போயசர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ திட்டத்தில் பணிபுரியும் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது.
ஏர் பேக்
அதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், நடிகை ஊர்மிளா கோத்தாரேவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காரில் இருந்த ஏர் பேக், விபத்து ஏற்பட்ட போது சரியான நேரத்தில் செயல்பட்டதால் அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அதிவேகமாக கார் ஓட்டுதல், அலட்சியமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது என பல்வேறு பிரிவுகளில் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.