தேவையில்லாத ஆணி...விளம்பரத்துக்கு சீன் போட்ட நடிகை !!லாக் பண்ண போலீஸ் !!
நடிகை உர்ஃபி ஜாவேத் பாலிவுட்டில் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமாக இருந்து வருகின்றார்.
உர்ஃபி ஜாவேத்
படங்களில் பெரிய காதாபாத்திரங்களில் நடித்திரா போதும், பாலிவுட் வட்டாரங்களிலும், ரசிகர்களுக்கும் தொடர்ந்து அறிமுகமான நடிகையாக இருந்து வருபவர் உர்ஃபி ஜாவேத். இந்தி "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்ற மீது இவர் பா.ஜ.க சார்பாக மும்பை போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கு காரணம் இவர் பொதுவெளியில் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் ஆடைகள் அணிவதே ஆகும். ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது என இவரை பெரும்பலமானவர்கள் கருத்துக்களையும் அவ்வப்போது கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சமீபத்தில் இவர், ஆபாசமாக உடை அணிந்து நடுரோட்டில் சுற்றி திரிந்த நடிகை உர்ஃபி ஜாவேத்தை மும்பை போலீசார் கைது செய்ததாக இணையத்தில் வீடியோ வைரலானது. ஆனால் விஷயமென்னவென்றால் இவர் கைத்தே ஆகவில்லை என்பது தான்.
மலிவான விளம்பரம்
ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ அது என்றும் வீடியோவில் இருப்பவர்கள் உண்மையான போலீஸ் அதிகாரிகளே இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த பெண்களும், அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை போலீஸ் ட்விட்டரில், உர்ஃபி ஜாவேத்தை போலீஸ் உடையணிந்து கைதுசெய்த இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, ஒருவர் மலிவான விளம்பரத்துக்காகச் சட்டத்தை மீற முடியாது. வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பெண் போலீஸார் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த தவறான விளம்பரத்துக்கு வழிவகுத்தவர் மீது ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போலி இன்ஸ்பெக்டரும், கைதுசெய்யப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.