நடிகை கமலா காமேஷ் காலமானார்? மகள் உமா ரியாஸ் கொடுத்த பரபரப்பு பேட்டி!
நடிகை கமலா காமேஷ் உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானதாக வெளியான தகவலுக்கு மகள் உமா ரியாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கமலா காமேஷ்
தமிழ் திரைத்துறையில் 80-களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ் .1974ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984ம் ஆண்டு காலமானார். இந்த தம்பதிக்கு உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார்.
கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட 480 படங்களில் நடித்துள்ளார்.அதிலும் இயக்குநர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி எனும் கதாபாத்திரத்தில் கமலா காமேஷ் நடித்திருந்தார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
மறுப்பு
தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமின்றி மேடைநாடகங்கள் , சின்னதிரையிலும் நடித்துள்ளார். தற்பொழுது கமலா காமேஷுக்கு வயது வயது 72. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானதாகத் தகவல் வெளியானது. இதற்கு மகள் உமா ரியாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவர் என்னுடன் சென்னை வீட்டிலிருந்தார். வயோதிக காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 72 என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார்.