கல்யாண கலை வந்துடுச்சு.. மண கோலத்தில் நடிகை த்ரிஷா - வைரலாகும் புகைப்படம்!

Trisha Tamil Cinema Tamil Actress
By Vinothini Aug 18, 2023 03:30 PM GMT
Report

நடிகை த்ரிஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருப்பார். பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

actress-trisha-wedding-photos-viral

இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

actress-trisha-wedding-photos-viral

மேலும், ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார், அதில் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் என்றே சொல்லலாம். தற்பொழுது நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் வெகு நாள் கழித்து ஜோடியாக நடித்து வருகிறார்.

திருமண கோலம்

இந்நிலையில், நடிகை த்ரிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து கேட்டபொழுது, அவர் தனது திருமணம் ஆன தோழிகள் விவாகரத்து பற்றி யோசித்து வருவதாகவும், அதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும்,

actress-trisha-wedding-photos-viral

சிறப்பான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்பவரை மட்டுமே தான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அத்தகைய நபரை தான் சந்தித்தால் உடனடியாக திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

actress-trisha-wedding-photos-viral

தற்பொழுது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த திருமண கெட்டப்பிலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது பிரபல நகைக்கடை ஒன்றிற்காக இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிகிறது.

actress-trisha-wedding-photos-viral

ஆனால் திருமண கெட்டப்பில் இவர் புகைப்படத்தை வெளியிட்டு வருவதால் அவருக்கு திருமண ஆசை வந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்பொழுது மீண்டும் இவரது திருமணம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.