பாதியில் நிறுத்தப்பட்ட நடிகை த்ரிஷா திருமணம் - காரணம் என்ன?
நடிகை த்ரிஷாவின் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பாதியில் நிறுத்தப்பட்ட த்ரிஷா திருமணம்
40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா.தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வரும் இவர்,
அண்மையில், பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை த்ரிஷா திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது ஏன் என்ற கேள்விக்கு அவரது அம்மா விளக்கம் அளித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், உண்மையை சொல்லப்போனால் வருண் மிகவும் நல்ல மனிதர் தான். அவர் த்ரிஷா சினிமாவில் நடிக்கிறார் என தெரிஞ்சும் திருமணத்திற்கு பின்னரும் நடிக்கலாம் என கூறினார்.
மாப்பிள்ளை போட்ட நிபந்தனையால் நின்ற திருமணம்
அத்தோடு த்ரிஷாவை தோழி சார்ந்து நிறைய encourage செய்திருக்கிறார். சில பெரியவர்கள் சேர்ந்து gossips பேசியதும், சில நிபந்தனைகளை விதித்து திருமணத்திற்கு பின்னர் அப்படித்தான் தான் இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தியதால் சரிப்பட்டு வரல. அதனால திருமணம் நின்றுவிட்டது.
எனவே ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயம் நமக்கு சரிப்பட்டு வரல என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர் என கூறினார்.