40 வயசாயிடுச்சு...இப்படியே இருக்க முடியாது - திருமணம் குறித்த சிந்தனையில் திரிஷா?
நடிகை திரிஷா 40 வயதை கடந்தும் திரையுலகில் மும்முரமாக பணியாற்றி வருகின்றார்.
திரிஷா
30 வயதை எட்டும் போதே பல நடிகைகள் காணலாம் போவார்கள். ஒரு சிலரே, 30 வயதை கடந்தும் நடித்து வருகிறார்கள். ஆனால், 40 வயதை அடைந்தும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நாயகியாகவே நீடிக்கிறார் திரிஷா.
விஜயுடன் லியோ படத்தில் நடித்தவர், அஜித்துடன் விடாமுயற்சி, கமல் - மணிரத்னம் கூட்டணியில் வரவுள்ள "thug life", தெலுங்கில் மிக பெரிய பொருட்செல்வில் உருவாகும் சிரஞ்சீவியின் "விஸ்வம்பரா" போன்ற நடிப்பதே திரிஷாவின் மார்க்கெட்டை உணர்த்தும்.
இது போக, பிருந்தா என்ற வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். திரைத்துறையில் பிஸியாக இருக்கும் திரிஷா குறித்து அடுத்தடுத்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில், முக்கியமான டாபிக் அவரின் திருமணம்.
திருமணம்
திரிஷா திருமணம் நிச்சயம் மட்டுமே ஒருமுறை செய்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு இப்பொது வரை திருமணம் நடைபெறவில்லை. இது குறித்து அண்மையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
அவர் பேசியது வருமாறு, இப்போது திரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து எத்தனை நடிகர், நடிகைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விவாகரத்து செய்து விடுகிறார்கள்.
அதன் காரணமாக, திருமணம் செய்து கடைசியில் விவாகரத்து செய்துவிட்டு மன அழுத்தத்தில் இருப்பதற்கு பதிலாக திருமணம் செய்யாமலே இருக்கலாம் என்று திரிஷா முடிவு எடுத்திருப்பதாக பயில்வான் கூறியுள்ளார்.