இனியும் தள்ளிப்போட முடியாது - தயாரான திரிஷா - இவர் தான் மாப்பிள்ளையா?

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரிஷா
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் 20 வருடங்களை கடந்தும் நீடிப்பவர் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் பிஸியான அவர், தொடர்ந்து விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்தார்.
தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் Thug Life, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் "விஸ்வம்பரா" என முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்து வருகின்றார்.
40 வயதை எட்டும் திரிஷா உச்சநட்சத்திரமாக இருக்கும் சூழலில், இன்னும் திரிஷா திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போதும் கொள்ளை அழகுடன் இருக்கும் அவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அதற்கு பிரபல சினிமா பத்திரிகையாளர் சுபைர் சில கருத்துக்களை கூறி வைரலாக்கி விட்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், சொந்தத்தில் இருக்கும் ஒருவரை தான் திரிஷா திருமணம் செய்யப்போகிறார் என்று சுபைர் தெரிவித்துள்ளார்.